நீரில் மூழ்கி இலங்கை பெண்ணொருவர் உயிரிழப்பு!

0
105

அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ்வாறு உயிரிழந்தவர் கம்பஹா, யக்கல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளார்.

குறித்த பெண் தற்போது அவுஸ்திரேலியாவின் கான்பராவில் வசித்து வருவதாகவும், அவரது கணவரும் அவுஸ்திரேலியாவில் பொறியாளராக பணிபுரிவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த பெண் தனது கணவர் உட்பட மற்றொரு குழுவுடன் கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது இந்த அனர்த்தத்திற்கு இடம்பெற்றுள்ளது.

கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அவுஸ்திரேலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.