லண்டனில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கையர்!

0
107

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் , திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Best One store என்ற கடையில் திருடியதாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. செயின்ட் ஹெலன்ஸ், சார்லஸ் வீதியை சேர்ந்தவர் மீதே இவ்வாறு குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளது.

சந்தேகநபர் கடந்த 11ஆம் திகதி செயின்ட் ஹெலன்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் தான் குற்றமற்றவர் என இதற்கு முன்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் அவர் கூறியிருந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் அதே ஆண்டு ஏப்ரல் வரையான காலப்பகுதியில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக் கூறப்படுகின்றது. சார்லஸ் வீதியில் உள்ள Best One storeஇல் திருடிய மதுபான போத்தல்களை வேறு இடங்களில் அவர் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்து வந்த போதிலும் பின்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இலங்கையருக்கான தண்டனை வழங்கும் திகதியாக மே மாதம் 24ஆம் திகதி குறிக்கப்பட்டுள்ள நிலையில் அதுவரையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே மாதம் 24ஆம் திகதி அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.