இலங்கையை தொடர்ந்து மின்தட்டுப்பாடை சந்திக்கும் நாடு

0
127

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிசக்தி நெருக்கடி, அந்நாட்டின் நீண்டகால மின்வெட்டை அதிகப்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக, பாகிஸ்தானின் பல பகுதிகள் நீண்டகால மின்வெட்டை எதிர்கொள்கின்றன. நகர்ப்புற மையங்களில் 6 முதல் 10 மணிநேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், சில கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் வரை மின்சாரம் தடைபடுவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை மற்றும் தேவை மற்றும் விநியோகத்தில் உள்ள மாறுபாடுகள் காரணமாக மின் உற்பத்தி நிலையங்கள் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை.

இதனால், தோராயமாக 6,000 முதல் 7,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் தங்கள் பணிக்கு இடையூறாக இருப்பதாக சிறு வணிகர்கள் கூறுகின்றனர். மேலும், கோடை வெயில் அதிகரித்து வருவதாலும், மின் தேவையாலும் மின்வெட்டு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த மின்வெட்டு பிரச்னையால் அங்குள்ள மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.