அமெரிக்காவில் 60 லட்சம் பேருக்கு நேர்ந்த அவலம்!

0
590

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் 60 லட்சம் பேர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தெற்கு கலிபோர்னியா பகுதியில் உள்ள மலைக் குன்றுகள், ஏரி மற்றும் ஆறுகள் வறட்சியாக காணப்படுகின்றன. கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தண்ணீர் விநியோகம் உள்ளிட்ட முறைகளில் வரும் ஜுன் 1 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் முதற்கட்டமாக அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.