சீனா – வடகொரியா சரக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தம்!

0
102

சீனாவில் கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டுடனான சரக்கு ரயில் போக்குவரத்தை வட கொரியா தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக தென்கொரிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சீன எல்லையில் உள்ள டான்டாங் நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து இரு நாடுகள் இடையே சரக்கு ரயில் போக்குவரத்து சூழல் கருதி நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எல்லைகளை மூடி வைத்திருந்த வடகொரியா கடந்த ஜனவரியில் தான் சீனாவுடனான சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்கியிருந்தது.