கீவ்வில் 900 பேர் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்!

0
105

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டிப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளதாக அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 5,00,000 உக்ரேனியர்கள் சட்டவிரோதமாக ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்

இதேவேளை, மரியுபோல் நகரில் போரினால் பாதிக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிட இடிபாடுகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஐ.நா.சபை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அங்குள்ள எஃகு உற்பத்தி ஆலையின் உள்ளே நிலைமை மோசமாக உள்ளது என்றும், அங்கே பதுங்கியுள்ளவர்கள் காப்பாற்றுமாறு கெஞ்சுவதாகவும் மரியுபோல் மேயர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் ரஷ்ய துருப்புகளின் முன்னேற்றத்தை தடுக்க உக்ரைனின் படைகள் தீவிரமாக போராடி வருகிறது.

சில நகரங்களில் பீரங்கித் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.