“நாம் அரசாங்கத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை” – சஜித் பிரேமதாஸ

0
74

அரசாங்கத்துடன் இணைந்த எந்தக் கட்சிகளுடனும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்பதை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தியது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ,

“ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இடைக்கால அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸவின் அறிக்கையை மறுத்துள்ளார்.

முழு நாட்டினாலும் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முட்டுக் கொடுப்பதற்காக செயற்படும் எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது எந்தவொரு குழுவிற்கும் எதிர்க்கட்சி எதிரானது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள போராட்டம் மூன்றாவது நாளாக நேற்றும் (28) கலிகமுவவில் தொடர்ந்தது. இந்த நாட்டில் உள்ள 21 மில்லியன் மக்களுடன் தவிர ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஒப்பந்தங்களையும் செய்யவில்லை என்று பிரேமதாஸ கூறியுள்ளார்.

ஊழல் மற்றும் திருட்டைத் தடுக்க நிரந்தர மற்றும் சக்திவாய்ந்த நிறுவனம் அமைக்கப்படும், அது சுதந்திரமாக செயல்படும் என்று சஜித் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளார்.