உக்ரைனுக்கு வந்த ஐ.நா முக்கியஸ்தர்! தாக்குதலை தொடுத்த ரஷ்ய துருப்புகள்

0
95

உக்ரைன் புறநகர்ப் பகுதிகளில் ரஷ்யாவின் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்த பகுதிகளில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையிலும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்ய துருப்புகள் நிறுத்தவில்லை என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மீது குற்றம் சாட்டி உள்ளார்.

உக்ரைன் கீவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்ய துருப்புகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஐ.நா.சபையை அவமதிக்கும் செயல் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஐ.நா.பொதுச் செயலாளர் வருகை தந்துள்ள நிலையில், கீவ் பகுதி மீது ஐந்து ஏவுகணைகள் பறந்து வந்து தாக்கியதாகவும், இது ஐ.நா.அமைப்பு உள்பட அனைத்து பிரதிநிதித்துவத்தையும் அவமானப்படுத்தும் ரஷ்ய தலைமையின் முயற்சி என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.