இராணுவ இரகசியங்களை வெளியிட்ட இருவர் கைது!

0
84

வடகொரிய ஏஜென்ட் என்று நம்பப்படும் நபரொருவருக்கு இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை தென்கொரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் தலைமை நிர்வாகி மற்றும் ஒரு இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது தென் கொரியாவின் கூட்டு இராணுவ கட்டளைக்கான உள்நுழைவு விவரங்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இதற்கு கைமாறாக பெரும் தொகை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1950-1953 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு போரில் இருந்து வட கொரியா மற்றும் தென் கொரியா உறவில் விரிசல் ஏற்பட்டது.

வட கொரிய ஏஜெண்டின் உத்தரவின் கீழ் பணிபுரியும் ஒரு அதிகாரி தென் கொரிய இராணுவ இரகசியங்களை உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர். ஊகிக்கப்பட்ட வட கொரிய முகவரின் இருப்பிடம் மற்றும் அடையாளம் தெளிவாக இல்லை.