சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்!

0
88

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் பணியாளர் மட்ட அல்லது ஆரம்பகட்ட உடன்படிக்கையை எட்ட முடியும் என, இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் உரையாற்றிய ஆளுநர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கான அடிப்படை, அதாவது பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு முன்னர், அத்தியாவசியமென கருதப்படும் நடவடிக்கைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன்பின்னரே, இலங்கையினால் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தல் செயற்பாடுகளை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.