குடிபோதையில் ரஷிய வீரரின் அராஜகம்

0
501

உக்ரைன் ரஷ்ய போர் இரண்டு மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராது நீண்டுகொண்டிருக்கின்ற நிலையில், உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதேசமயம் ரஷியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள உக்ரைன் பிரதேசங்களில் வாழும் பெண்கள் பல்வேறு கொடுமையான அனுபவங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் ரஷியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள கெர்சன் கிராமத்தில் வசிக்கும் 16 ஒருவரை ரஷ்ய வீரர்கள் வன்கொடுமை செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறும் சி.என்.என்.னுக்கு அளித்த பேட்டியில் ,

குண்டுவீச்சில் இருந்து காத்து கொள்வதற்காக எங்களது வீட்டின் அடித்தளத்தில் குடும்பத்தினருடன் பதுங்கி இருந்தோம். உணவு கொடுப்பதற்காக மாலை வேளையில் குழந்தைகளுடன் வெளியே வரும்போது, குடிபோதையில் இருந்த ரஷிய வீரர் ஒருவர் எங்களை பார்த்து விட்டார். அவர் எங்களை நோக்கி, அனைவருக்கும் என்ன வயது? என கேட்டார்.

12 மற்றும் 14 வயதில் 2 சிறுமிகள் இருந்தனர். எனக்கு வயது 16. முதலில், எனது தாயாரை அவர் கூப்பிட்டார். உடனே அவரை விட்டுவிட்டு, பின்னர் என்னை கூப்பிட்டார்.

குடிபோதையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரஷிய வீரர் அந்த கர்ப்பிணியை கொல்லவும் முயன்றுள்ளார். மற்றொரு ரஷிய வீரர், இந்த சம்பவங்களை நடக்காமல் தடுக்க முற்பட்டார். ஆனால், குடிபோதையில் இருந்த ரஷிய வீரர் அதனை கேட்கவில்லை. அந்த ஆசாமிக்கு நீல நிற கண்கள் இருந்தன. ஆனால், அடர்த்தியாக இருந்தன. வேறு எதுவும் எனக்கு நினைவில்லை என 16 வயது கர்ப்பிணி சிறுமி கூறியுள்ளார்.

இதேபோன்று மற்ற ரஷியர்கள் அந்த ஆசாமியை புளூ (நீல நிறம்) என அழைத்துள்ளனர். கடந்த காலத்தில் அந்த ரஷிய வீரர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார். நாங்கள் உணவுக்காக வெளியே வரவில்லை என்றால், எங்களை அவர் பார்த்திருக்கமாட்டார் என்று அந்த சிறுமி கூறியுள்ளார்.

இதனையடுத்து அடுத்த நாள், பாதிக்கப்பட்ட சிறுமியை மற்றொரு வீரரிடம் அழைத்து சென்றுள்ளளனர். அவரும் சத்தம் போட்டு, வன்கொடுமை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால், மிரண்டு போன சிறுமி அச்சத்தில் அழுதுள்ளார். ஆனால், சிறுமி உண்மையை கூறுகிறாரா? அல்லது பொய் கூறுகிறாரா என அறிவதற்காக சோதனை செய்தேன் என சிறுமியிடம் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவையா? என்பது பற்றி தனிப்பட்ட முறையில் சி.என்.என். விசாரிக்கவில்லை என்றபோதும், உக்ரைனிய வழக்கறிஞர்கள், இந்த குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து உண்மையை உறுதிப்படுத்தி உள்ளதுடன், இது ஒரு போர் குற்றம் என அவர்கள் சி.என்.என்.னிடம் தெரிவித்துள்லதாகவும் கூறப்படுகின்றது.