விண்வெளி நடைபயணத்தில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்கள்!

0
98

சர்வதேச விண்வெளி மையத்தின் கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்கள், 7 மணி நேரம் விண்வெளி நடைபயணத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நவுகா பல்நோக்கு ஆராய்ச்சி கூடத்தின் ரோபோ கையை கட்டமைக்கும் பணிக்காக விண்வெளி நடைபயணத்தில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர்.

ஏறத்தாழ 7 மணி நேரம் ஆராய்ச்சி கூடத்தின் இயந்திர கை மீது மூடப்பட்டு இருந்த தெர்மல் போர்வையை அகற்றி இயந்திரத்தை இயக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வீரர்களின் இயந்திர கை கட்டமைப்பு பணி நடைபயணத்தின் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.