ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நபர் பலி!

0
147

ஹப்புத்தளையில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹப்புத்தளை நகரில் இன்றைய தினம் (28-04-2022) மக்கள் கொழும்பு – பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுட்ட ஒருவர் உடல் களைப்பு காரணமாக வீதி ஓரத்தில் அமர்ந்திருந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் தங்கமலை பகுதியை சேர்ந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹப்புத்தளை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.