வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வாசிகளுக்கு மத்திய வங்கியின் கோரிக்கை

0
59

வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையர்களினதும் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அந்நிய செலாவணி குறைவடைந்துள்ள சந்தர்ப்பத்தில் இலங்கை மக்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடியை குறைப்பதற்ககாக இந்த நேரத்தில் உதவுமாறு மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு மாத்திமே இந்த பணம்  பயன்படுத்தப்படும் என வங்கி உறுதியளித்து

இந்த அந்நிய செலாவணி பெறுபேறுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் அவற்றின் பாவனையைப் பேணுவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் மூன்று மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றையும் நியமித்துள்ளார்.

மத்திய வங்கியில் டொலர் கையிருப்பு மிகவும் குறைந்த மட்டத்தை அடைந்துள்ளமையால் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.