ஜனாதிபதி மீது நம்பிக்கை இழந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் படைவீரர்கள்

0
419

இரண்டு கால்களையும் இழந்த விசேட அதிரடிப்படையை முன்னாள் வீரர்துசாரா குமார யுத்தகால பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுடான கோத்தபாய ராஜபக்சவை விமர்சிக்ககூடியவர் இல்லை.

ஆனால் கொழும்பில் ஜனாதிபதியின் அலுவலகத்தின் முன்னால் முகாமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல முன்னாள் படையினரில் 43 வயதான அவரும் ஒருவர். பொருளாதாரம் வீழ்ச்சியடைய தொடங்கியவேளை அவரது அமைச்சரவையில் அனேகமானவர்கள் பதவி விலகிய வேளை பதவி விலகுமாறு வேண்டுகோளை புறக்கணித்துள்ள தனது முன்னாள் தலைவரான கோத்தபாய ராஜபக்சவில் துசார குமார நம்பிக்கை இழந்துள்ளார்.

How a powerful dynasty bankrupted Sri Lanka in 30 months | Business and  Economy News | Al Jazeera

நாங்கள் இந்த நாட்டை காப்பாற்றுவதற்காக எங்களை அர்ப்பணித்தோம், ஆனால் தற்போது இடம்பெற்றுள்ள விடயங்களை பார்த்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். தனது முன்னாள் சகாக்களுடன் அமர்ந்திருந்தவாறே அவர் இதனை தெரிவித்தார்.

அவர்களில் பலர் செயற்கை அவயங்களுடன் காணப்பட்டனர். பெருந்தொற்றினால் பலவீனமடைந்திருந்த இந்து சமுத்திர தீவின் பொருளாதாரம் உக்ரைன் மீதான ரஸ்யாவின் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மேலும் பாதிக்கப்பட்டது. வரிச்சலுகைகள் உட்டப மக்கள் ஆதரவு கொள்கைகள் காரணமாக அரசாங்கத்தின் நிதி நிலை ஏற்கனவே பலவீனமான நிலையில் காணப்பட்டது. மிகவும் வேகமாக முடிவடையும் அந்நியசெலாவணி கையிருப்புகள் இலங்கை எரிபொருள் உணவு மருந்து போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியது. பற்றாக்குறைகளும் மின்வெட்டும் தொடர்ச்சியாக நீடித்ததால் கடந்த மாதம் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக இந்த மாதம் சர்வதேச நாணயநிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்காக அரசாங்கம் பல நாடுகளுடனும் பல்தரப்பு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. உருவாகிவரும் நெருக்கடிகளிற்கு மத்தியில் வீதிபோராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ளன. ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்துகொண்டுள்ளனர். இந்த நாட்டின் வரிசெலுத்துபவர்கள் காரணமாக எனக்கு ஓய்வுதீயம் கிடைக்கின்றது. இந்த நாட்டை காப்பாற்றுவதற்கான இளைஞர்களின் துணிச்சலான முயற்சிக்கு நாங்கள் ஆதரவளிக்கவேண்டும் என்கின்றார் குமார. அவர்கள் இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக போராடுகின்றனர் என முன்னாள் படைவீரரான அவர் தெரிவிக்கின்றார்.

அவர் 16 வருடங்கள் இராணுவத்தில் போரிட்டவர். இதற்காகதான் இங்கு வந்திருக்கின்றோம் என அவர் தெரிவிக்கின்றார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் 2009 மே 19 ம்திகதி முடிவிற்கு வருவதற்கு ஒருவாரத்திற்கு முன்னர் தனது கால்களை இழந்தார். ராஜபக்சவும் அவரது சகோதரரான தற்போதைய ஜனாதிபதியும் அந்த தாக்குதலிற்கு உத்தரவிட்டனர் இறுதியில் கிளர்ச்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

கொழும்பின் நீர்நிலைக்கு முன்னால் உள்ள சிறிய ஆனால் அதிகரித்து வரும் ஆர்ப்பாட்ட முகாமில் சகல வயதினரும் காணப்படுகின்றனர். முஸ்லீம்கள் நோன்பில் ஈடுபடுகின்றனர்,பௌத்த மதகுருமார், கத்தோலிக்க அருட்சகோதரிகள் தங்கள் மத ஆடைகளில் காணப்படுகின்றனர். சிறிய எண்ணிக்கையிலான முன்னாள் படைவீரர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் அவர்களின் பிரசன்னம் ராஜபக்சாக்களின் தீவிர ஆதரவாளர்கள் கூட அதிருப்தியடைந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

முன்னாள் படைவீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து இராணுவபேச்சாளர் கருத்து தெரிவிக்க மறுத்தார். அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளிப்பது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இராணுவம் ஆதரிக்கின்றது என அவர் குறிப்பிட்டார். அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு எந்த தடங்களையும் ஏற்படுத்த மாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் தெளிவாக தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

நூறு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து வந்துள்ள முன்னாள் போர்வீரர்கள் மும்முரமான கடற்கரை வீதியில் சிறிய பாய்களில் உறங்குகின்றனர். வரிசையில் நின்று பொதுமலசலகூட வசதிகளை பயன்படுத்துகின்றனர். நாங்கள் கஸ்டங்களிற்கு பழகியவர்கள். இதனால் உணவு குறித்து நாங்கள் கவலைபடவில்லை என இஞ்சிதேநீரை அருந்தியபடி 40 வயது உடித்த ரோசன தெரிவிக்கின்றார்.

Thinakkural.lk

கடந்து செல்பவர்கள் அங்கவீனர்களான படைவீரர்களுடன் செல்பி எடுத்துக்கொள்கின்றனர். முன்னாள் படைவீரர்கள் பலர் தாங்கள் ராஜபக்சவிற்கு மீண்டும் வாக்களிக்கபோவதில்லை என தெரிவிக்கின்றனர். இவர்கள் 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய பாதுகாப்பை அடிப்படையாக வைத்து பிரச்சாரம் மேற்கொணடவேளை அவருக்கு ஆதரவளித்தவர்கள். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராவதற்கு அவருக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்காது என இரு கால்களையும் இழந்த 40 வயது எச்எம்எஸ் மகிந்தசிறி தெரிவித்தார். மக்களிற்கு அவர் மீது நம்பிக்கையில்லை என அவர் தெரிவித்தார்.