மின்கட்டணத்தை நினைத்த மாதிரி அதிகரிக்க முடியாது

0
132

மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. நிறைவேற்றுத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரின் விருப்பத்துக்கமைய மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாது. அத்துடன் நள்ளிரவில்  அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிப்பதை போன்று மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாதென இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முழுமையாக அனுமதி வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.

மின்கட்டண அதிகரிப்புக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.