இலங்கை ரக்பி-7 அணித் தலைவராக ஸ்ரீநாத் சூரிய பண்டார

0
118

இலங்கை றக்பி -7 அணித் தலைவராக கண்டி அணியைச் சேர்ந்த ஸ்ரீநாத் சூரிய பண்டார உட்பட 8 பேர் கண்டியில் தெரிவு.

எதிர் வரும் ஜூலை 7ம் திகதி நடைபெறும் பொதுவய நாடுகளின் (காமன்வெல்த்) விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற உள்ள இலங்கை றக்பி -7 அணியின் தலைவராக கண்டி அணி வீரர் ஸ்ரீநாத் சூரிய பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 20 பேர் கொண்ட குழுவில் கண்டி அணியைச் சேர்ந்த இதரவீரர்கள் எட்டுப்பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர். (26) இலங்கை றக்பி சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்ைகயில் இது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி அணியில் கண்டி அணி வீரர்கள் 8 பேரும் ஹெவ்வொக்ஸ் மற்றும் சீ.எச். அணிகளைச் சேர்ந்த தலா மூவரும் விமானப்படை மற்றும் கடற்படை அணியைச் சேர்ந்த தலா இருவரும் பொலீஸ் மற்றும் இராணுவ அணியைந் நேர்ந்த ஒருவர் வீதமும் 20 பேர் கொண்ட அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.