15 வயதுடைய சிறுவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸ் அதிகாரி!

0
151

றம்புகண பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் உரிய அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் காயமடைந்துள்ளார். மாணவனின் கை மற்றும் முதுகின் மீது துப்பாக்கி சூட்டு காயங்கள் உள்ளன. அத்துடன் துப்பாக்கி சூட்டில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.

இந்த மாணவன் பாடசாலைக்கு சென்று வீடு திரும்புவதற்காக நகரத்திற்கு செல்லும் போது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவன் எந்த ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது.

மலைப்பாங்கான பகுதியில் மாணவன் நின்றிருந்ததாகவும், அவரை பொலிஸார் துரத்தி துரத்தி சுட்டதாகவும் மாணவனின் தாய் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.