உயிரிழந்த பிரபல இலங்கை நடிகை

0
121

 இலங்கை நடிகை அனுஷா சோனாலி (Anusha sonali) திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்உயிரிழந்துள்ளார்.

களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக நடிகை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் இறப்பதற்கு முன்பு சில காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 1995 ஆம் ஆண்டு சரசவி திரைப்பட விழாவில் சிறந்த வளர்ந்து வரும் நடிகைக்கான விருதைப் பெற்றதற்காக நடிகை அனுஷா சோனாலி (Anusha sonali) புகழ்பெற்றார்.

47 வயதான அனுஷா சோனாலி (Anusha sonali) , விசிடீலா உட்பட பல பிரபலமான படங்களில் நடித்து உள்ளூர் சினிமா துறையில் வலம்வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.