போராட்டக்காரர்களினால் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

0
99

காலி முகத்திட்டலில் மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் கடமையில் ஈடுபட நாட்டின் 4 பக்கத்தில் இருந்தும் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு உணவு வழங்குவதற்காக மாத்திரம் இன்று வரையில் பொலிஸ் திணைக்களம் 3 கோடி ரூபாய் வரையில் செலவிட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தற்போது போராட்ட இடத்தை இலக்கு வைத்து சுமார் 1500 பேர் பொலிஸ் திணைக்களத்திற்கு விஷேட கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நாளாந்த உணவுக்காக பொலிஸ் திணைக்களம் நாளொன்றுக்கு சுமார் 17 லட்சத்து 50ஆயிரம் ரூபாவை செலவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பளத்தைத் தவிர்த்து மற்ற அடிப்படைச் செலவுகளுக்காக 30 லட்சம் ரூபாய் செலவிட நேரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டத்தின் ஆரம்பம் முதல் மேற்படி இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்கு கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியிருப்பினும் இதற்கான கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினருக்கான செலவு தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது