தடைப்பட்ட புகையிரத சேவைகள்!

0
119

நாட்டில் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டும் நிலையில் பல புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் இன்றைய தினம் வேலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவுள்ளன.

அதேசமயம் பேருந்து உரிமையாளர்கள் விரும்பினால் மாத்திரம் சேவையில் இருந்து விலக முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.