மெக்சிக்கோ துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழப்பு!

0
139

மெக்சிக்கோவில் சீமெந்து தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துலா நகரில் உள்ள கிரஸ் அசூல் சீமெந்து தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டி இரு தரப்பினருக்கு இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்த நிலையில் 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒன்பது பேரை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.