உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்பும் ஜேர்மனி

0
361

உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் வழங்குவது பற்றி சுமார் 40 நாடுகள் ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தில், அவசர ஆலோசனை நடத்தியுள்ள வேளையில் பெர்லின் அது பற்றி அறிவித்துள்ளது.

போரில் வெல்ல முடியும் என்று உக்ரைன் நம்புகிறது. நட்பு நாடுகளும் சந்திப்பின்போது அதே நம்பிக்கையைப் பிரதிபலித்ததாக அமெரிக்கா கூறுகிறது.

பூசல் முடிவுக்கு வந்த பின்னர், உக்ரேனின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் நட்பு நாடுகள் பணியாற்றி வருகின்றன.

ஜேர்மனி முதன்முறையாக உக்ரைனுக்குப் பெருமளவு ஆயுதங்களை அனுப்புவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த அது உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஜெர்மனி, 50 விமான எதிர்ப்புக் கவச வாகனங்களையும் உக்ரைனுக்கு அனுப்புகிறது.

இதன்மூலம் மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு அத்தகைய ஆயுதங்களைக் கொடுப்பதில்லை என்ற தனது கொள்கையை ஜெர்மனி தளர்த்தியுள்ளது.