அறிமுகமானது கோல்டன் பாரடைஸ் விசா!

0
349

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், அந்நியச் செலாவணியை அதிகரிக்க 10 வருடங்கள் வரை தங்கியிருந்து வேலை செய்யும் கோல்டன் பாரடைஸ் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியுள்ள இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி சரிவு, பெட்ரோலியம், டீசல் இறக்குமதி செய்ய முடியாமல் கடும் மின் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் பல்வேறு விலை உயர்வு போன்றவற்றால்.

அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க, இலங்கை வங்கியில் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வைப்புத்தொகை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு கோல்டன் பாரடைஸ் விசா வழங்கப்படும்.