மக்ரோனின் திட்டங்கள்! – மக்களின் ஆதரவும் எதிர்ப்பும்!

0
43

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் அறிவித்திருந்த ஓய்வூதிய வயதெல்லை உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இம்மானுவல் மக்ரோன், 62 வயதாக உள்ள ஓவ்யூதிய வயதை 65 ஆக அதிகரிப்பதாகவும் – ஆசிரியர்களுக்கு 10% வீத ஊதிய உயர்வும் – சாரதிகளுக்கான redevance audiovisuelle கட்டண இரத்தும் செய்வதாகவும் மூன்று திட்டங்களை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு பெரும்பான்மையான மக்கள் (64% வீதமானவர்கள்) எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாரதிகளுக்கான redevance audiovisuelle கட்டணத்தை (தற்போது வருடத்துக்கு €138 யூரோக்கள்) முற்றாக நீக்குவதாக மக்ரோன் உறுதியளித்திருந்தார். இந்த திட்டத்துக்கு 86% வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களின் ஊதியம் எவ்வித நிபந்தனைகளும் இன்றில் 10% வீதத்தால் அதிகரிக்கப்படும் என மக்ரோன் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த சம்பள உயர்வுக்கு 69% வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Elabe நிறுவனம் L’Express மற்றும் SFR ஊடகத்தினருடன் இணைந்து மேற்கொண்ட புதிய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.