நாட்டில் நெல் அறுவடை 45 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக தெரிவிப்பு

0
47

விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் உணவு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிடின் இந்நாட்டு மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என விவசாயதுறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

இதன்போது, நாட்டில் நெல் அறுவடை 45 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில வர்த்தக நிலையங்களில் 50 கிலோ யூரியா உர மூட்டை 40,000 ரூபாவுக்கு விற்கப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விலை உயர்வால் விவசாயிகள் யூரியா உரம் கொள்முதல் செய்வது குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.