கோட்டாவையும் – மகிந்தவையும் வியக்க வைத்த முன்னாள் பிரதம நீதியரசரின் கருத்து

0
107

மக்கள் வீதியில் இறங்கி, ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவியில் இருந்து விலகுமாறு கடும் அழுத்தங்களை கொடுத்து வரும் போது, அவர்கள் தொடர்ந்தும் பதவிகளில் இருப்பார்கள் எனில், நாடாளுமன்றத்தின் ஊடாக அவர்களை பதவிகளில் இருந்து நீக்க முடியும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் பிரதமரை பதில் ஜனாதிபதியாக நியமித்து, ஒரு மாதத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரங்கள் இருப்பதால், யோசனை ஒன்றின் மூலம் அவற்றை நாடாளுமன்றத்திற்கு பெற்றுக்கொண்டு, நாடாளுமன்றத்தின் ஊடாக அந்த அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்துடன் தற்போது நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்காக புதிய பிரதமரின் கீழ் 25 பேரை கொண்ட சர்வக் கட்சி அமைச்சரவை ஒன்றை நியமிக்க வேண்டும். தேவையானால், அந்த அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களை அரச சேவை ஆணைக்குழுவின் மூலம் நியமிக்க முடியும்.

இதனையே விஜயதாச ராஜபக்ச கடந்த 4 ஆம் திகதி சபாநாயகரிடம் அரசியலமைப்புத் திருத்த யோசனையாக கையளித்தார். எனினும் வரலாற்றில் எந்த சபாநாயகரும் செய்யாத வகையில் தற்போதைய சபாநாயகர் அது சம்பந்தமாக சட்ட ஆலோசனையை பெற நடவடிக்கை எடுத்துள்ளார்.

சாதாரணமாக இதற்கு முன்னர் சபாநாயகர்கள் நாடாளுமன்ற விவகாரங்கள் சம்பந்தமாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றதில்லை. சட்டமா அதிபர், நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்குவதில்லை.

இதற்கு கடந்த கால உதாரணம் உள்ளது. எனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டு பிரேரணையின் போது, நாடாளுமன்றத்தில் அதியுயர் தன்மை நானும் ஏற்றுக்கொண்டேன்.

இதன் காரணமாக குற்றச்சாட்டு பிரேரணையை எதிர்கொள்வது என தீர்மானித்தேன் எனவும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.