இலங்கையில் இருந்து தப்பிச் செல்லத் தயாராகும் அரசியல்வாதிகள்

0
89

முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேற தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இது தொடர்பில் சட்டத்தரணிகள் சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிலரே இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை மேற்கொள்வதாக அந்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அவர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்வதற்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகள் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் நேற்று இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்தாகவும் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.