6,600 லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 2,000க்கும் மேற்பட்ட நுகர்வோர் காத்திருப்பு!

0
88

ஹட்டனில் நேற்று 26ஆம் திகதி விநியோகிக்கப்பட்ட 6,600 லீற்றர் மண்ணெண்ணெயைக் கொள்வனவு செய்ய 2000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் காத்திருந்ததாகத் தெரிய வருகிறது.

அட்டன் -கொழும்பு பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தருகில் இவ்வாறு அவர்கள் காத்திருந்தனர். ஹட்டன் பிரதேசத்தில் நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருப்பதாக பாவனையாளர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை நேற்று பாடசாலை முடிந்ததும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு ஆசிரியர்களும் வரிசையில் நின்றிருந்தனர்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தலா 500 ரூபாவுக்கு மண்ணெண்ணெயை வழங்க நடவடிக்கை எடுத்தனர்.