முல்லைத்தீவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

0
35

முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் அம்மாச்சி உணவகத்தில் பணியாற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மல்லாவி பிரதேசத்தில் விவசாய திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற அம்மாச்சி உணவகத்தில் 09 வரையான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொழில் வாய்ப்பை பெற்று தமது குடும்ப பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்