பிரபல பாடகி சூசன் ஜாக்ஸ் கனடாவில் உயிரிழப்பு!

0
55

பிரபல கனேடிய பாடகி சூசன் ஜாக்ஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.

Saskatoonல் கடந்த 1948ல் பிறந்த சூசனுக்கு வயது 73 ஆகும். இவர் பிரபலமான பாப் பாடகி, பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தார்.

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சூசனுக்கு ஏற்கனவே ஒரு சிறுநீரகம் மாற்றி பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது சிறுநீரகத்தையும் மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு சூசன் தள்ளப்பட்டார்.

இதற்காக காத்திருந்த அவர் உடல் நிலை மோசமானதால் பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் சூசன்.

சூசன் தனது மென்மையான குரலுக்காக எப்போதும் நினைவுக்கூரப்படுவார் என பலரும் தெரிவித்துள்ளனர்.

4 வயதில் இருந்து பாடும் சூசனில் பாடல்கள் எப்போதும் ஒலித்து கொண்டிருக்கும் என அவரின் மூத்த சகோதரர் ரிக் கூறியுள்ளார். இதோடு ரசிகர்கள் பலரும் சூசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.