தூக்கி வீசப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாதைகள்!

0
36

இலங்கையில் கடந்த காலங்களில் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் உள்ளாகி கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு  நீதி கோரி காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை தாங்கிய பதாதைகள் வீசியெறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் உடையில் பொதுமக்கள் குழுவொன்று  ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் இதனை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரங்களாக தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச  மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை  பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக இன்றும் 19ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.