கட்டட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு தேசிய நிர்மாண சங்கம் கோரிக்கை!

0
71

இலங்கையில் குறைந்தது 3 மாதங்களுக்கு கட்டட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு தேசிய நிர்மாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் அதிகரிப்பின் காரணமாக நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாதிருப்பதாக சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் உள்ளூர் சீமெந்து பக்கட் ஒன்று 2750 ரூபாவாகவும் மற்றும் வெளிநாட்டு சீமெந்து பக்கட் ஒன்று 2850 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை முதல் சீமெந்தின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதன் இதன் காரணமாக நிர்மாணப் பணிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

அரச நிர்மாணப்பணிகளும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார்துறைகளும் நிர்மாண பணிகளில் ஈடுபடுவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.