உணவுகளின் விலைகளை உணவக உரிமையாளர்களே தீர்மானிப்பார்கள்! – அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்

0
68

சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு இணையாக தேனீர் முதல் அனைத்து உணவுகளின் விலைகளையும் அதிகரிப்பது தொடர்பான முடிவை எடுக்கும் பொறுப்பை உணவக உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக உணவக தொழில் நலிவடைந்துள்ளது எனவும் இதன் காரணமாக தமது வர்த்தகத்தை பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பை உணவகங்களின் உரிமையாளர்களிடமே வழங்கியுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.

உணவுகளின் விலைகளை அதிகரிப்பதா அல்லது தற்போதைய மட்டத்திலேயே விலைகளை வைத்திருப்பதா என்பதை உணவகங்களின் உரிமையாளர்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.