மக்கள் தஞ்சமடைந்த ஆலை மீது ரஷ்ய கொடூர தாக்குதல்: பச்சிளம் குழந்தை பலி

0
505

உக்ரைனில் உள்ள ஓடேசா நகரம் மீது ரஷ்யா ஏவுகணை ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை தாக்கியதில் 3 மாத குழந்தை உள்பட 6 பேர் கொல்லபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 60வது நாளாக தொடர்ந்து போரை நடத்தி வருகின்றது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் ரஷ்ய துருப்புகள் கைப்பற்றி உள்ளன.

இதேவேளை, மரியுபோலில் உள்ள எக்கு ஆலையில் உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். சரண் அடையுமாறு ரஷ்யா தெரிவித்ததை எக்கு ஆலையில் உள்ள உக்ரைன் வீரர்கள் ஏற்க மறுத்து விட்டனர். 

இந்நிலையில், அந்த ஆலையை சுற்றி வளைத்துள்ள ரஷ்ய துருப்புகள் அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொது மக்கள், வீரர்கள் தஞ்சம் அடைந்துள்ள ஆலையை தாக்கும் முயற்சியில் ரஷ்ய துருப்புகள் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. 

இதனால் அங்குளள பொதுமக்களின் கதி என்ன ஆகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா ஓடேசா நகரம் மீது ஏவுகணை ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை தாக்கியதில் 3 மாத குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது,

ஓடேசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பச்சிளம் குழந்தை பலியாகி உள்ளது. அந்த குழந்தை ஒரு மாதமாக இருந்த போது போர் தொடங்கியது. என்ன நடக்கிறது என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? மரியுபோலில் ரஷிய துருப்புகள், பல்லாயிரக்கணக்கான பொது மக்களை கொன்று விட்டு அதை மறைக்க முயன்றதை காட்டும் புதிய ஆதாரங்கள் வெளியாகிறது. 

தங்கள் குற்றங்களின் தடயங்களை அவர்கள் எவ்வாறு மறைக்கிறார்கள் என்பது பற்றிய ரஷ்ய உரையாடல்களை இடைமறித்து கேட்டு உள்ளோம் என்றார்.

இழந்த உக்ரைனில் உள்ள ஓஹான்ஸ்சி பிராந்தியத்தில் உள்ள கிர்ஸ்கே கிராமத்தில் ரஷ்யாவின் தாக்குதலில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கவர்னர் செர்ஜி கெய்டே தெரிவித்தார்.