கணவரை கவனித்துக் கொள்ள தனது பதவியை ராஜினாமா செய்த அமைச்சா்!

0
170

புற்றுநோயால் அவதியுறும் கணவரை அருகிலிருந்து கவனித்துக் கொள்வதற்காக பெல்ஜியம் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சோஃபி வில்மஸ் (Sophie Wilms) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா்.

கடந்த 2019 முதல் 2020-ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பொறுப்பு வகித்த வில்மஸ்(Sophie Wilms), ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த கிறிஸ்டோஃபா் ஸ்டோனை (Christopher Stone)கடந்த 2009-ஆம் ஆண்டு மணந்தாா்.

தற்போது ஸ்டோனுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக வில்மஸ் (Sophie Wilms) தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது கணவா் மூளைப் புற்றுநோயால் அவதியுறுகிறாா்.

பொறுப்பு மிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் பதவியைத் தொடா்ந்தால் அவரது அருகிலிருந்து கவனித்துக்கொள்ளவும் தேவைப்படும் நேரத்தில் அவருக்கு ஆறுதல் அளிக்கவும் எனக்கு நேரமிருக்காது.

எனவே, எனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்று சோஃபி வில்மஸ்(Sophie Wilms) தெரிவித்துள்ளாா்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமா் அலெக்ஸாண்டா் டிக்ரூ(Alexandre Dcrew), வில்மஸின் முடிவு அவா் மீது மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்துவதாகப் பாராட்டியுள்ளாா்.