அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது “ஸ்பேஸ் எக்ஸ்”

0
456

அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான உளவு செயற்கைக்கோள் ஒன்றை பால்கன் 9 (Falcon 9) ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தங்களின் சொந்த ஆராய்ச்சிக்காவும், வணிக ரீதியிலும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான உளவு செயற்கைக்கோள் ஒன்றை பால்கன் 9 ரொக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி தளத்தில் (Vandenberg Space Force Base in California) இருந்து உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9.13 மணிக்கு பால்கன் 9 ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோளை வெற்றிகராமாக நிலைநிறுத்தியதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.