சன் டிவி தொகுப்பாளினிக்கு நிச்சயதார்த்தம்: மாப்பிள்ளை எந்த நடிகர் தெரியுமா?

0
219

சன் டிவி தொகுப்பாளினிக்கும், தமிழ் திரையுலக நடிகருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

ஜெயா டிவி, காவேரி டிவி உள்பட ஒருசில டிவிகளில் தொகுப்பாளினியாக இருந்த கண்மணி, தற்போது சன் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.

Newsreader Kanmani Sekar And Navin Engagement Photos | சின்னத்திரை பிரபலம்  கண்மணி மற்றும் நவீனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் | News in Tamil

இவருக்கும் தமிழ் திரையுலகின் நடிகரான நவீன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தமிழில் ’பூலோகம்’ ’மிஸ்டர் லோக்கல்’ ஆகிய படங்களிலும் மலையாளத்தில் சில படங்களிலும் நடித்துள்ள நவீன் தற்போது ’இதயத்தை திருடாதே’ என்ற டிவி சீரியலில் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் சன் டிவி தொகுப்பாளினி கண்மணி தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் நவீன் – கண்மணி ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.