கொழும்பில் அரசு வீட்டில் தங்கவுள்ள மைத்திரிபால

0
104

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக தெரியவருகிறது. 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்தப்பட்ட கொழும்பு, பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டை, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தும் அவருக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதற்கு அமைச்சரவை ஊடாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 29ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

அதனால் பெஜட் வீதி வீட்டில் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியால் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து புத்தாண்டின் பின்னர் அவர் அவ்வீட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பில் மற்றொரு வீட்டை அரசாங்கம் வழங்கியுள்ளதுடன், பெஜட் வீதி வீட்டை விட்டு அவர் வெளியேறி அரசு வழங்கும் புதிய வீட்டில் தங்கவுள்ளதாக தினகரன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.