தொழிற்சாலையில் மர்ம முறையில் உயிரிழந்த தந்தை மற்றும் 9 வயது மகன்

0
71

தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் காலி அக்மீமன பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலைக்கு தண்ணீர் சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட தொட்டியில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

நேற்று (15) காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பை பார்வையிட வந்து தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளதுடன், நீண்ட நேரம் வெளியே வராத காரணத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே சென்று அவதானித்த போது தண்ணீர் தொட்டியில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்..

உயிரிழந்தவர் ரப்பர் தொழிற்சாலையின் நிர்வாக தர அதிகாரி என்பதுடன், தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பாதுகாப்பு குறித்து விசாரிக்க அங்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது.