அரச தலைவருடன் பேசப்போவதில்லை – விமல் வீரவன்ச ஆவேசம்

0
149

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமாக இருந்தால், சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டாரவுக்கு வழங்கிய விவசாய இராஜாங்க அமைச்சுப் பதவியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நிர்வாகம் இராஜினாமா செய்வதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் விமல் வீரவன்ச வலியுறுத்தியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமான இயங்க தீர்மானித்த 11 கட்சிகள் சார்பில் கொழும்பில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டர்.