போர்க்களத்தில் திருப்பம்! எல்லைத்தாண்டி ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்திய உக்ரைன்

0
577

உக்ரைன் விமானப்படையினால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர், உக்ரைனின் தலைநகர் கியேவ் மீது அதிக தாக்குதல்களை நடத்தப்போவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.

உக்ரைனின் தலைநகரான கியேவை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

ரஷ்யாவில் நேற்று இரவு நடத்தப்ட்ட உக்ரைனிய தாக்குதல்களுக்கு பதிலடியாக இதுபோன்ற தாக்குதல்கள் தீவிரமடையும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

ரஷ்யாவின்  கப்பல் ஏவுகணைகள்  தொழிற்சாலையின் மீதே உக்ரைனிய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இதன் விளைவாக, ஆலையின் நீண்ட தூர மற்றும் நடுத்தர தூர விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் உற்பத்தி மற்றும் பழுதுபார்க்கும் பட்டறைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அழிக்கப்பட்டன ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

 இதற்கு பதிலடியாகவே உக்ரைனின் தலைநகர் கியேவ் மீது அதிக தாக்குதல்களை நடத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ஏற்கனவே ரஷ்ய ஏவுகணை கப்பலான மொஸ்க்வாவும் உக்ரைனிய தாக்குதலால் கடலில் மூழ்கிய சம்பவம் நேற்று இடம்பெற்றது