மானிப்பாயில் வீட்டில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிள் திருட்டு

0
136

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தரித்து நின்ற பல்சர் மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 

அராலியில் வசிக்கும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் நேற்றிரவு மானிப்பாயில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். 

அவர்கள் தூக்கத்திலிருந்த வேளை இரவு சத்தம் கேட்டதைத்தொடர்ந்து அவர்கள் எழுந்து பார்த்துள்ளார்கள். அப்போது அவரது மோட்டார் சைக்கிளைத் திருடன் திருடிக்கொண்டு செல்வதை அவதானித்துள்ளனர். 

திருடன் வேகமாகச் சென்றதால் அவர்களால் மோட்டார் சைக்கிளை மீட்க முடியவில்லை. இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.