கிளிநொச்சி அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு சம்பவம்!

0
147

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் கடமை நேரத்தில் மருத்துவர் ஒருவர், நோயாளிகளை கவனிக்காது மேசையின் மேல் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்து கைத்திலைபேசியில் மூழ்கியிருந்த  புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் கிளிநொச்சி- அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. கடமை நேரத்தில் குறித்தவைத்தியர் நோயாளிகளை கவனிக்காது தனது கைபேசியில் மூழ்கியிருப்பது தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவரின் ஓய்வு நேரத்தில் அவர் எப்படி இருந்தாலும் , நோயாளி ஒருவர் வெளியில் காத்திருக்க அவரை பாராது  மருத்துவர் தனது கடமையை செய்யாது இவ்வாறு தொலைபேசியில்  மூழ்கி இருப்பது  கண்டிக்கத்தக்கது என பலரும் கூறியுள்ளனர்.

Gallery