ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எடுத்துள்ள அதிரடி முடிவு!

0
177

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த மூன்று ஆண்டுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 21 விமானங்களுக்காக நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 27 விமானங்களைக் கொண்டிருந்தது, அது தற்போது 24 ஆகக் குறைந்துள்ளது.

இந்த விமானங்களுக்கு பதிலாக புதிய விமானங்களை கொண்டு வரவும் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டுக்குள் விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரித்து புதிய இடங்களுக்கு சேவையை ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எதிர்பார்க்கிறது.