போர்க்குற்றச்சாட்டில் இருந்து தப்புவதற்காக உடலங்களை தோண்டியெடுக்கும் ரஷ்ய படையினர்!

0
123

உக்ரைன் மரியுபோல் தாக்குதல்களின் போது இறந்தவர்களின் உடலங்களை தோண்டியெடுக்கும் பணிகளில் ரஷ்ய படையினர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே ரஷ்ய படையினர் உடலங்களை தோண்டியெடுப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தாக்குதல்களின்போது இறந்த உக்ரைனியர்களின் பெரும்பாலான உடலங்கள் குடியிருப்புத் தொகுதிகளின் முற்றங்களில் புதைக்கப்பட்டுள்ளன.

இந்த உஉடல்களையே ரஷ்யர்கள் தோண்டி எடுக்கத் தொடங்கியுள்ளதாக மரியுபோல் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பசில் ராஜபக்சவுக்கு கோவிட் தொற்று உறுதி - தமிழ்வின்

இந்தநிலையில் தம்மால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மக்களை அடக்கம் செய்ய ஆக்கிரமிப்பாளர்கள் குடியிருப்பாளர்களை அனுமதிப்பதில்லை என்று மரியுபோல் நகர சபை குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த விதியைச் செயல்படுத்த ஒவ்வொரு குடியிருப்பு முற்றத்திற்கும் ஒரு மேற்பார்வையாளர் ரஷ்யாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி குடியிருப்பு முற்றங்களில் இருந்து தோண்டியெடுக்கப்படும் உடலங்கள் 13 நடமாடும் தகனச்சாலைகளின் ஊடாக தகனம் செய்யப்படுகின்றன.

மரியுபோலில் ஏழு வாரங்களாக இடைவிடாத ரஷ்ய எறிகனைத் தாக்குதல், பசி மற்றும் உறைபனி வெப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.