உலக வங்கியின் பிரதிநிதியை சந்தித்த ரணில்

0
176

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் உலக வங்கியின் பிரதிநிதிக்கும் இடையில் கடந்த 10ஆம் திகதி சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக மட்டுமல்லாது, நாட்டுக்குள் நடத்தப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சம்பந்தமானவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை அரச அதிகாரிகள் உலக வங்கயின் பிரதிநிதிகளை சந்திக்கும் முன்னர் ரணில் விக்ரமசிங்க, உலக வங்கியின் பிரதிநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை முக்கிய அம்சமாகும் என அரசியல் தரப்பத் தகவல்கள் கூறுகின்றனர்.