வட கொரிய செய்தியாளருக்கு அதிபர் கிம் ஜாங் உன் வழங்கிய பரிசு!

0
362

வட கொரிய செய்தியாளருக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong-un) வழங்கிய பரிசு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kim Jong-un

வட கொரியாவின் தற்போதைய அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். இவர் உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அவர் தற்போது 50 – ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய வட கொரிய செய்தியாளருக்கு கிம் ஜாங் உன் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக வழங்கியுள்ளார். 

1994 ஆம் ஆண்டு தந்தை கிம் இல் சுங்கின் மரணம் முதல் 2006 இல் அதன் முதல் அணு ஆயுத சோதனை வரை, தனது 50 ஆண்டுகால வாழ்க்கையில் வட கொரியாவின் மிக முக்கியமான நிகழ்வுகள் சிலவற்றை செய்திகளாக வழங்கி புகழ்பெற்றவர் ரி சுன் ஹி. தற்போது அவருக்கு 70 வயதாகிறது.

இந்நிலையில் தற்போது அவர் செய்தியாளராக 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ஒட்டி அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பை கிம் பரிசாக வழங்கியுள்ளார்.

செய்தியாளர் ரி சுன் ஹி தொடர்பில் கிம் ஜாங் உன் கூறுகையில்,

சிறுவயதில் இருந்தே தொகுப்பாளராக பணியாற்றிய இவர் நாட்டின் “பொக்கிஷங்களில்” ஒருவர் ” என அவர் கூறினார்.