பீஸ்ட் பட 2 நாள் வசூலை ஓரம்கட்டிய யஷ் நடித்த KGF 2- தெறிக்கும் வசூல்

0
196

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக யஷ் நடித்துள்ள KGF 2 திரைப்படம் ஏப்ரல் 14 அதாவது நேற்று வெளியாகி இருந்தது.

முதல் பாகத்தின் வெற்றி KGF 2 படத்திற்கு பெரிய ஓபனிங் இருந்தது, எந்த இடத்தில் எடுத்தாலும் புக்கிங் பெரிய அளவில் நடந்து வந்தன.

ஒரே நாளில் பீஸ்ட் பட 2 நாள் வசூலை ஓரம்கட்டிய யஷ் நடித்த KGF 2- தெறிக்கும்  வசூல் - சினிஉலகம்

கர்நாடகாவை தாண்டி வட மாநிலம் மற்றும் கேரளா போன்ற இடங்களில் பீஸ்ட்டை விட KGF 2 படத்திற்கு தான் அதிக டிமான்ட் என்றே கூறலாம்.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 2 நாள் முடிவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, ஆனால் யஷ் நடித்துள்ள KGF 2 திரைப்படம் ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ. 134.5 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்த வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக படக்குழு தரப்பில் இருந்து வெளியாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.