ஜெனரேட்டர் வெடித்ததில் தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த பெரும் சோகம்!

0
147

மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த ஜெனரேட்டர் வெடித்ததில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண்ணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பதுளை கெப்பட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய பெண் மற்றும் அவரது 9 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜெனரேட்டர் (மின்பிறப்பாக்கி) வெடித்ததில் படுகாயமடைந்த 9 வயது மகள் நேற்றிரவு  மரணம், தாய் இன்று அதிகாலை மரணம்..! | Jaffna Breaking News 24x7

இந்நிலையில் கடந்த 29 ஆம் திகதி வீட்டில் இருந்த ஜெனரேட்டர் வெடித்ததில் குறித்த பெண்ணும் அவரது மகள் மற்றும் மகனும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் இரண்டு சிறுவர்களும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரது மகள் நேற்று இரவு உயிரிழந்துள்ளதுடன், இன்று காலை குறித்த பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஐந்து வயது சிறுவன் ரிட்ஜ்வே லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றான்.